A poem about all the wisdom the tradition has preserved, and the one thing it cannot do for you.
I have read. Oh, how deeply I have read. Shelf after shelf, scripture after scripture, name after luminous name. And here is the beautiful scandal of it all: every single one of them, beneath their different words, forms, and faces, was pointing to the exact same truth. Every author, every book — the same essence, the same finger, the same moon.
The Vedas thundered it. The Upanishads whispered it. The Gita sang it. Tulsidas danced it. Shankara dissected it with diamond logic. Kabir shouted it in the streets. Ramana simply was it in silence — and that silence spoke louder than all the libraries I had stacked inside my mind.
And yet, I saw a strange divide — within myself and all around: some have truly learnt it, while others are still exploring.
“Still exploring” — I lived in that space for lifetimes. It is a holy restlessness, a sincere wandering. One more book, one more teacher, one more teaching. But it can quietly become a trap — the comfort of seeking without the terror of finding. I was a professional seeker: in love with the path, yet secretly afraid of arrival, because arrival meant the end of “me.”
This poem was born at that threshold — the cry of an exhausted explorer who finally sees that the map is not the territory, and who is ready to stop reading the menu and become the meal. The sages have held the door open with infinite patience. But the walking through it is yours alone. And here lies the final irony: everyone showed the path, yet everyone is waiting for the system to change.
🌌 காலத்தின் கையில்
நான் மறையில் தேடினேன்,
சிவன் உரையில் தேடினேன்,
புராணக் கதையில் தேடினேன்.
நாரதர் சொன்னார்,
சனத்குமாரர் சொன்னார்,
தத்தாத்ரேயர் சொன்னார்,
அஷ்டாவக்ரர் சொன்னார்,
வசிஷ்டர் சொன்னார்.
கிருஷ்ணர் கீதையில் சொன்னார்,
சங்கரர் சொன்னார்,
நால்வர் சொன்னார்,
ராமானுஜர் சொன்னார்.
துளசிதாசர் சொன்னார்,
வள்ளுவரும் சொன்னார்,
ஔவையாரும் சொன்னார்,
புத்தர் சொன்னார்,
சமணர் சொன்னார்,
குரு கோவிந்தர் சொன்னார்,
கபீர் சொன்னார்,
ரமணர் சொன்னார்.
ஞானியர் சொன்னார்,
கற்றோர் சொன்னார்,
இன்னும் பலர் சொன்னார்கள்—
அன்றும் சொன்னார்கள்,
இன்றும் சொல்கிறார்கள்.
ஆனால் என்ன பயன்?
அறிந்ததை அடுக்குவது அறிவல்ல,
அறிந்தவனை அறிதலே ஞானம்.
கண்டவன் விண்டிலன்,
விண்டவன் கண்டிலன்.
சொற்கள் கரையிலே நின்றன,
மௌனம் மட்டும் கடலைத் தொட்டது.
தேடியது நீயே,
தேடுபவன் நீயே,
தேடப்பட்டதும் நீயே.
அதனை நீயே அறிந்தால் தான் ஞானம்,
அதனை நீயே ஆனால்தான் முக்தி.
எல்லோரும் வழியைக் காட்டினர்;
நடக்க வேண்டியது நீயே.
ஆனால் நீயோ…
காலம் மாறக் காத்துக்கொண்டிருக்கிறாய்!


Leave a comment