ஓடும் நதி அனைத்தும் கால்களே
எரியும் நெருப்பு அனைத்தும் வாய்களே
வீசும் காற்று அனைத்தும் கைகளே
ஆம் குகை ஈசனே
உன் மக்களுக்கு
அங்கம் எல்லாம் லிங்கமே
அருவான பரம்பொருளையே ‘சிவம்’ எனும் சொல் குறிக்கின்றது. சம்ஸ்கிருத மொழியில் ‘லிங்கம்’ என்பதன் பொருள் ‘அடையாளம்’ என்பதாகும். எனவே ‘சிவலிங்கம்’ என்பது அருவுருவாய் பரம்பொருளைக் காட்டுவது. அருவான பரம்பொருள் உண்மையை, படிப்படியாக உணருவதற்கான பாதையே.