
கவி காளமேகம் பாடிய பாடல் ,
முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கால ரைக்கால்கண் டஞ்சாமுன் – விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒரு மாவின் கீழரையின் றோது.
திருக்குற்றால ஆலயச் சுவரில் எழுதப்பட்ட பட்டினத்தார் பாடல்.
“காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுன் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானை நினை“
அதே பொருள் கொண்ட பாடல்கள் .
Leave a comment