குரங்காட்டியின் கோளில் குரங்கிருக்க
பொம்மலாட்ட கயிற்றின் அடியில் பொம்மை இருக்க
உன் விளையாட்டை நான் விளையாட
உன் வார்த்தையை நான் பேச
உன் விருப்பமாய் நானிருக்க
இவ்வுலகின் பொறியாளனே
வெண்மல்லிகை கோமானே
நான் ஓடிக்கொண்டிருந்தேன்
நீ நிறுத்தம் வரை.
என்னை அறியாது நானிருக்க
நீ எங்கிருந்தாய்
பொன் தன் நிறத்தில் இருக்க
நீ என்னுள் இருந்தாய்
உன்னுள் கண்டேன்
வெண்மல்லிகை கோமானே
முரண்பாடாகிய உனை என்னுள்
அங்கம் ஏதும் இன்றி
நாட்காலம் பகலில் உன்னால் வருந்திநின்றேன்
நாட்காலம் இரவில் உன்னால் பித்தனானேன்
அல்லும்பகலும் பிணியானேன் உன்னால் என்னை இழந்தேன்
கொண்டகாதல் கண்ட முதல் பசித்தாகம் தூக்கம் மறந்தேன்
கணவர் உள்ளே காதலர் வெளியே
இவ்விருவரை எவ்வாறு நான் கையாளுவேன்
இவ்வுலகம் மற்றும் அவ்வுலகம்
இருவேறுஉலகை எவ்வாறு நான் கையாளுவேன்
என் வெண்மல்லிகை கோமானே
எவ்வாறு கையாளுவேன் என்னொரு கையில்
இந்த வட்டோடும் நீண்ட வணங்குதலும்
நிலத்திலே புதையல்யிருக்க
பழத்திலே சுவையிருக்க
மண்ணிலே பொன்னிருக்க
விதையிலே எண்ணையிருக்க
அறுதி இருதயத்தில் மறைந்திருக்க
யாரும் அறியா வழிகாட்டியே எங்கள்
வெண்மல்லிகை கோமானே
மணம் இருக்க மலர் எதற்கு
சாந்தம் இருக்க தியானம் எதற்கு
ஒருமை இருக்க தனிமை எதற்கு
வெண்மல்லிகை கோமானே
நாளைய தேவை இன்றெனருக்க
இன்றைய தேவை பொழுதெனருக்க
வேண்டாமே உன் காலநேரம்
என் வெண்மல்லிகை கோமானே
கூடிய நரையும் குன்றிய தேகமும்
உடைந்த பற்களும் வளைந்த முதுகும்
யார் என கேட்கும் முன்
ஊர் உதவி நாடும் முன்
காலம் உருவத்தை கரைக்கும் முன்
நாடிடு தேடிடு வழிபடு சிவனை
பதிவிறக்கிய பயன்பாட்டை
பயனிலா பண்பாட்டாகிட்ட
பயனற்ற கலாச்சாரம்
நகரா நெருப்பும்
எரியா காற்றும்
முயலா முயற்சியே
அறிவாய் மானிடா