ஒன்றாக நன்றாக

பஞ்சபூதங்களும் ஒன்றாக

சந்திரசூரியரும்  உனதாக

ஓ நந்திவாசனே

உலகங்கள் நிரப்பிய உன்னைக் கண்டேன்

மலைத்தேன்

இனி யாரை காயப்படுத்துவேன்

ஏன் ராமநாதா

 

 

அவன் வழிதனில்

தேனீயின் வழிதனில் வாசனை மலர்கள் ஓட கண்டேன்

என்ன ஒரு அதிசயம்

இதயத்தின் வழிதனில் புத்தி ஓட கண்டேன்

கடவுளின்  வழிதனில் ஆலயம் ஓட கண்டேன்

The Men

ஒருமுறை என்னிடம் காண்பிப்பாயா

அந்த மனிதனை

கண்களின் வீரத்தை அறுத்தெறிந்தவன்

இதயத்தின் சாரத்தை வறுத்தெறிந்தவன்

மற்றும் உலகின் ஆரம்பத்தை கற்றறிந்தவன்

என் குகை ஈசனே

 

Symbol

ஓடும் நதி அனைத்தும் கால்களே

எரியும் நெருப்பு அனைத்தும் வாய்களே

வீசும் காற்று அனைத்தும் கைகளே

ஆம் குகை ஈசனே

உன் மக்களுக்கு

அங்கம் எல்லாம் லிங்கமே

அருவான பரம்பொருளையே ‘சிவம்’ எனும் சொல் குறிக்கின்றது. சம்ஸ்கிருத மொழியில் ‘லிங்கம்’ என்பதன் பொருள் ‘அடையாளம்’ என்பதாகும்.  எனவே ‘சிவலிங்கம்’ என்பது அருவுருவாய் பரம்பொருளைக் காட்டுவது.  அருவான பரம்பொருள் உண்மையை, படிப்படியாக உணருவதற்கான பாதையே.

Temple of Body

முழு ஆலயமும்

இவ்வுடலில் இருக்க

மற்றொன்றின் தேவை

இங்கு எதற்க்கு

யாரும் கேட்கவில்லை

அவ்விரண்டை

குகை ஈசனே

நீ கல் என்றால்

நான் யார்?

 

 

மாயை மறைந்திட

உடல் மண்

உயிர் வான்

எதை நான் அடைவேன் கோமானே,

எதற்க்கு, எப்படி

உன்னை நினைக்கவே

என் மாயையை நீக்கிடு

வெண்மல்லிகை கோமானே

Run

குரங்காட்டியின்  கோளில் குரங்கிருக்க

பொம்மலாட்ட கயிற்றின் அடியில் பொம்மை இருக்க

உன் விளையாட்டை நான் விளையாட

உன்  வார்த்தையை நான் பேச

உன் விருப்பமாய் நானிருக்க

இவ்வுலகின்  பொறியாளனே

வெண்மல்லிகை கோமானே

நான் ஓடிக்கொண்டிருந்தேன்

நீ  நிறுத்தம் வரை.

எங்கே நீ

என்னை அறியாது நானிருக்க

நீ எங்கிருந்தாய்

பொன் தன் நிறத்தில் இருக்க

நீ என்னுள் இருந்தாய்

உன்னுள் கண்டேன்

வெண்மல்லிகை கோமானே

முரண்பாடாகிய  உனை என்னுள்

அங்கம் ஏதும் இன்றி

என்னையிழந்தேன்

நாட்காலம் பகலில்  உன்னால் வருந்திநின்றேன்

நாட்காலம் இரவில் உன்னால் பித்தனானேன்

அல்லும்பகலும் பிணியானேன் உன்னால் என்னை இழந்தேன்

கொண்டகாதல் கண்ட முதல் பசித்தாகம் தூக்கம் மறந்தேன்

இரு காதல்

கணவர் உள்ளே காதலர் வெளியே

இவ்விருவரை எவ்வாறு நான் கையாளுவேன்

இவ்வுலகம் மற்றும் அவ்வுலகம்

இருவேறுஉலகை எவ்வாறு நான் கையாளுவேன்

என் வெண்மல்லிகை கோமானே

எவ்வாறு கையாளுவேன் என்னொரு  கையில்

இந்த  வட்டோடும்  நீண்ட வணங்குதலும்