அவன் விதைத்தவன்
சூரியன் இட்ட விதையே உலகின் துடிப்பு
மனம் இட்ட விதையே உடலின் துடிப்பு
இருப்பதோ ஒரு மனம்
அதில் துடிப்பதோ நீ
இப்பிறப்பினால் பயமேதும் எனக்கில்லை
சென்ன மல்லிகார்ஜுனா
பிரம்மம்
வேதங்கள் வாதங்களாயின
சாஸ்திரங்கள் சந்தேகமாயின
அனைத்து ஆகமங்களும் தீர்ந்துபோயின
தெரிந்த புராணங்களும் விட்டு போயின
நான் எங்கே
அவன் எங்கே
ப்ரம்மம் எங்கே
சென்ன மல்லிகார்ஜுனா
அனைத்துமாகி
பசிக்கு பிட்சை பாத்திரம் இருக்க
தாகம் தணிக்க குளங்கள் இருக்க
குளிர்க்கு பிறர் துறந்த ஆடைகள் இருக்க
உறங்க பாழடைந்த கோவில் இருக்க
அனைத்துமாகி இருக்கிறார் சென்ன மல்லிகார்ஜுனா
தேவையின் தேவையாய்
தேவை தேவையுற
நட்பாய் பாசமாய்
காதலாய் கருணையாய்
சேயாய் உடன்பிறப்பாய்
தாயாய் தந்தையாய்
ஏன் கடவுளும் ஆவாய்
தேவையற நீ யாரோ
கமல்கூற்று
சமூகவலைதளம் சமூகwarகளமாக மாற
மூட வாதிகள் அரசு வியாதிகள் அவைகூற
ரசிக பெருமான் அம்மான் அறைகூற
சமூகம் சுமுகமாக அறன் கூறுமா?
yet to name
இறுக பிடிக்காதே உறுதியாய் இழப்பாய்
திரையை மூடாதே முடிவாய் இருப்பாய்
இங்கு தருணத்தே எல்லோருமாய் சொர்கமாய்
விட்டு செல்லாதே இவ்வாராய் அழிப்பாய்
நெஞ்சினிலே
உன் ஒளியில் காதல் அறிந்தேன்
உன் அழகில் கவிதை அறிந்தேன்
யாரும் அறியா
உன் நடனத்தை நெஞ்சினிலே நான் அறிந்தேன்
அக்காட்சியே இக்கலையானது
தாலாட்டு
வானத்தின் தாலாட்டில் காற்று கண்ணுறங்க
ஆகாயம் தூங்கிவிழ
முடிவிலி வான் மடி உறிஞ்சிருக்க
மௌனமாய் வானிருக்க
தாலாட்டு நிறைவுற்றது
இல்லாமல் இருக்கிறான் ஈசன்
தீரனே
தோல்வியை வென்றிட்ட வீரனே
தேவைகளை எவ்வாறு தோற்க்கடித்தாய்
கற்றுக் கொடு
அவர்கள் பைத்தியமாக
அவர்கள் சோகமாக
அவர்கள் இரண்டும் இரெண்டென கூட்ட
அவர்கள் நானாக
அவர்கள் நீயாக
அவர்கள் நம் தேவையாக
அவர்கள் சிரிக்க
அவர்கள் கதறி அழ
அவர்கள் செத்து மடிய
கற்றுக் கொடு
One of the Few (Waters)
When you’re one of the few to land on your feet
What do you do to make ends meet?
Teach.
Make them mad, make them sad, make them add two and two.
Make them me, make them you, make them do what you want them to.
Make them laugh, make them cry, make them lie down and die.