Perished Millions

Millions have perished for desire,

millions perished in temptation,

millions have perished

for wealth, women and land.

Guheshwara, I cannot see any who has perished for you.

– Allamaprabhu/465

No43

Like

The lightning behind the clouds

The mirage behind nothingness

The silence behind the sound

The light behind the eyes

Such is your state guheshwara

TEACHERS

அ சிறியர் முதல் ஆசிரியர் வரை

இயற்கை முதல் சான்றோர் வரை

கற்பித்தவர்க்கு நன்றி

Happy Teachers day to all gurus.

அனுமன் நாற்பது

குரு பாத தூசி கொண்டு 
மனக்கண்ணாடி தூய்மை கொண்டேன்
நாற்செல்வம் அளிக்கும் ரகுவம்ச ராமனின் 
மாசற்ற மகிமையை பாடி மகிழ்கின்றேன் 

அறிவற்ற நான் அறிந்தேன்
வாயு புத்திரனை தியானிக்க 
அவனே வலிமை அறிவு புத்தி அளித்து
அணைத்து இன்னல்களை விடுவிப்பான் 

வெற்றி அனுமனுக்கே அவனே
ஞான ஒழுக்கத்தின் பெருங்கடல் 
வெற்றி அத்தெய்விக மந்திக்கே 
அவனே மூவுலகையும் ஒளிர்வித்தவன்

ராமா தூதனே 
மகா வலிமை கொண்டவனே 
அஞ்சனை மைந்தனே 
வாயு குமாரனே

மகா தீர்னே
மின்னல் உடல் வீரனே
தீய எண்ணத்தை அழிப்பவனே 
நல்ல எண்ணத்தை அளிப்பவனே 

தங்க நிறத்தவனே
ஒளிரும் தோற்றம் கொண்டவனே
அழகிய காதணியும்
சுருள் மூடியும் கொண்டவனே

ஒரு கையில் கதாயுதம்
மறு கையில் கொடியும்
இட தோளில் 
மௌஞ்சி நூல் அணிந்தவனே 

சிவ அவதாரமே
கேசரி நந்தனே
உனது மேன்மையை 
இவுலகு போற்றி வணங்குமே

கற்றவனே ஒழுக்கசீலனே
சிறந்த புத்திமானே
ராமனின் பணிக்காக 
ஆவலுடன் காத்திருப்பவனே

ராமகாவியத்தில் இன்புறுபவனே
சீதா ராம
இலட்சுமணை
இருதயத்தில் கொண்டவனே

சிறு மந்தியாய் தோன்றி
சீதா அன்னையை வணங்கியவனே
சீரிய மந்தியாய் தோன்றி
இலங்கையை எரித்தவனே

பல ரூபதாரியாய்
அசுரரை அழித்தாய் 
ராமச்சந்திர மூர்த்தியின்
ஆணையை விரும்பி முடித்தாய்  

சஞ்சீவினி மலை கொண்டு 
இலட்சுமனை காத்தவனே
ரகு வம்ச திலக ராமனே
உன்னை தழுவி இன்புற்றானே

ராமரால் போற்றி புகழப்பட்டவனே
ராமருக்கு பிரியமான
பரதனை போன்றவன் 
என அறியப்பட்டவனே

ஆயிரம் தலை ஆதிசேஷனால் 
போற்றி புகழப்பட்டவன் என 
ராமர் கூறி தழுவி 
இன்புற்றானே 

சனகர் பிரம்மா 
மற்ற முனிவர்களும்
நாரத சரஸ்வதி
நாக அகிசரூம்

எமன் குபேரன் திசை தேவர்கள்
உன் புகழ் பாட முடியாதபோது
புலவர் மற்றும் அறிஞர்களை 
என் சொல்வது

உனது சேவை அறிந்தவன் சுக்ரீவன்
உனது நட்பால் 
ராமனின் உதவி பெற்றான்
ராஜ்ஜயம் ஆண்டான் 

உனது அறிவுரை
விபீஷணன் ஏற்றதனால்
இலங்கை அரசனான் 
இது உலகம் அறிந்தது 

ஆயிரம் யோஜனய் தாண்டி
விண்னில் சென்றாய்
கதிரவனை கனியென 
விழுங்கி தின்றாய் 

ராமரின் மோதிரம்
உன் வாயில் இருக்க
கடலும் கால் அளவானதே
இதில் என்ன ஆச்சிரியம்

கடின செயல்களும்
இவ்வுலகில்
எளிதானதே
உனது அருளால்

ராமா ராஜ்ஜியமோ
அனுமன் காவலில்
அவன் அனுமதியன்றி
அணுவும் நுழையாதே
உனை சரணடைய 
அனைத்து இன்பமும் கிடைக்கும்
உன் காவலில் நானிருக்க
பயம் ஏதும் எனக்கில்லை

உனது வலிமை
உனது அதிகாரம்
உனது கர்ஜனை கேட்டால்
மூஉலகமும் நடுநடுங்கும்

அனுமன் நாமம் கூற
பூத பிசாசு
ஆவிகளும்
விலகி ஓடும்

அனுமன் நாமம் கூற
வியாதிகளும்
துன்பக்களும்
விலகி ஓடும்

எண்ணம் வார்த்தை செயலில்
அனுமனை நினைத்த வந்தால்
அனைத்து இன்னல்களும்
விலகி ஓடும்

யோகிகளும் போற்றி வணங்கும்
ஸ்ரீராமனின் தேவைகளை
சுலபமாய் நீ 
நிறைவேற்றினாய் 

விரும்பியதை வேண்டி 
அனுமனை அணுக அவனோ
உரியதை தந்து அதை ஏற்க
முடிவிலா முழுமை தருகிறார் 

நான்கு யுகங்களும் போற்றும்
உன் புகழ்
உன் வலிமை
இப்பிரபஞ்சம் போற்ற பரவுமே 

ரிஷி முனிவரை
காத்து நிற்பது நீ 
அசுரரை அழித்தது நீ 
ராமரின் நேசமானாய் நீ

எட்டு சித்திகளும் 
ஒன்பது செல்வங்களும்
வேண்டுவோருக்கு வழங்க
சீதையின் அருள் பெற்றவன் நீ 
 
ராமரை அறிந்த நீ 
ராமபக்த அனுமன் நீ 
எப்பொழுதும்
ரகு வம்ச சேவகன் நீ 

உனது பெருமை பாட 
ராமர் அடி சேர
முப்பிறவி பிணிகளும்
விலகி ஓடும்

இறந்தபின் ராமனிடம்
சேர்த்தவன் அவனே
பலபிறவிகளிலும் நிரந்தர
சேவகனே

நினைக்க வேண்டாம்
வேறு தெய்வமே
அனுமனை வேண்டி பெறலாம்
அனைத்து பேரின்பமே 

துன்பங்கள் பறந்துபோகும்
வலிகளும் மறந்துபோகும்
மகாவலிமை கொண்ட
அனுமனை நினைக்க 

போற்றி போற்றி
அனுமன் போற்றி
குருவாய் நின்று
அருள்வாய் போற்றி

எவன் ஒருவன் நூறு முறை 
அனுமன் நாற்பதை கூற
அவன் முக்தியற்று
முழு மகிழ்ச்சியும் அடைவான்

எவன் ஒருவன் பக்தியுடன்
அனுமன் நாற்பது கூற
அவன் வேண்டியது பெற
அந்த கௌரி கணவன் சாட்சி

ரகு பாடி 
இறைவனை வேண்டியது
இறைவன் என்றுன்றும் 
இருதயத்தில் எழுந்தருள வேண்டும்  

வாயு புத்திரனே
மங்கள மூர்த்தி ரூபனே
சீதா ராமா லக்ஷ்மருடன்  
இருதயத்தில் எழுந்தருள வேண்டும்

மனிதம்

இரக்கம் அற்ற மதம் உண்டா?

கருணை அற்ற இனம் உண்டா?

பரிவு அற்ற மனம் உண்டா?

மனிதம் அற்ற மற்றவரை கால

கணிதம் வேரறுக்கும்

Media – The Elephant in the room

Media is not in harmony with the medium

Media is not ashamed of absurdity

They speak nonsense beyond limit

They Obstinately persists in supporting their views

We admit the medium which lacks the media

The parable for today’s social media.

Once there was a village high in the mountains in which everyone was born blind. One day a traveler arrived from far away with many fine things to sell and many tales to tell. The villagers asked, “How did you travel so far and so high carrying so much?” The traveler said, “On my elephant.” “What is an elephant?” the villagers asked, having never even heard of such an animal in their remote mountain village. “See for yourself,” the traveler replied.
The elders of the village were a little afraid of the strange-smelling creature that took up so much space in the middle of the village square. They could hear it breathing and munching on hay, and feel its slow, swaying movements disturbing the air around them. First one elder reached out and felt its flapping ear. “An elephant is soft but rough and flexible, like a leather fan.” Another grasped its back leg. “An elephant is a rough, hairy pillar.” An old woman took hold of a tusk and gasped, “An elephant is a cool, smooth staff.” A young girls seized the tail and declared, “An elephant is a fringed rope.” A boy took hold of the trunk and announced, “An elephant is a water pipe.” Soon others were stroking its sides which were furrowed like a dry plowed field, and others determined that its head was an overturned washing tub attached to the water pipe.
At first each villager argued with the others on the definition of the elephant as the traveler watched in silence. Two elders were about to come to blows about a fan that could not possibly be a pillar. Meanwhile the elephant patiently enjoyed the investigations as the cries of curiosity and angry debate mixed in the afternoon sun. Soon someone suggested that a list could be made of all the parts: the elephant had four pillars, one tub, two fans, a water pipe, and two staffs, and was covered in tough, hairy leather or dried mud. Four young mothers, sitting on a bench and comparing impressions, realized that the elephant was in fact an enormous , gentle ox with a stretched nose. The traveler agreed, adding only that it was also a powerful draft horse and that if they bought some of his wares for a good price he would be sure to come that way again in the new year.

Today’s Media lacks ethics, culture and is tolerant to interpretations, heresies and sects.

In the world of machine learning and data science, a data make sense only to those who understands the information in it, this is prepared for a set audience and not for general public.

Today’s Media is nothing but meme’s of the medium.

images

எதுவும் வேண்டாம்

அவன் அல்லது அவனடியாரும் வேண்டாம்

வேற்று அல்லது ஒற்றுமையும் வேண்டாம்

வேண்டும்  வேண்டாம்

வேண்டாம் வேண்டாம்

நீயும் வேண்டாம்

நானும் வேண்டாம்

சென்ன மல்லிகார்ஜுனா

உன் சிந்தனையில் நானிருக்க

எதுவம் வேண்டாம்

அவன் விதைத்தவன்

சூரியன் இட்ட விதையே உலகின் துடிப்பு

மனம் இட்ட விதையே உடலின் துடிப்பு

இருப்பதோ ஒரு மனம்

அதில் துடிப்பதோ நீ

இப்பிறப்பினால் பயமேதும் எனக்கில்லை 

சென்ன மல்லிகார்ஜுனா

பிரம்மம்

வேதங்கள் வாதங்களாயின
சாஸ்திரங்கள் சந்தேகமாயின
அனைத்து ஆகமங்களும் தீர்ந்துபோயின
தெரிந்த புராணங்களும் விட்டு போயின
நான் எங்கே
அவன் எங்கே
ப்ரம்மம் எங்கே
சென்ன மல்லிகார்ஜுனா

 

அனைத்துமாகி

பசிக்கு பிட்சை பாத்திரம் இருக்க
தாகம் தணிக்க குளங்கள் இருக்க
குளிர்க்கு பிறர் துறந்த ஆடைகள் இருக்க
உறங்க பாழடைந்த கோவில் இருக்க
அனைத்துமாகி இருக்கிறார் சென்ன மல்லிகார்ஜுனா