Hanuman Chalisa
The Hanuman Chalisa, composed by Saint Tulsidas, is a powerful (நாற்பது) 40-verse hymn dedicated to Lord Hanuman. It is believed to grant strength, courage, and protection to those who recite it with devotion.
Below is my Hanuman Chalisa in Tamil, (அனுதினம் ரகு பாடி
இறைவனை வேண்டியது) followed by its transliteration and the verse-by-verse meaning.
முன்னுரைச் சுருக்கம் (Tamil Summary)
1. மனத் தூய்மை (Purification of Mind): ஹனுமன் சாலீஸா மனதை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிட்டுத் தொடங்குகிறது. குருவின் அருளால் அந்த மனமாகிய கண்ணாடியில் உள்ள அழுக்குகளைத் துடைப்பதன் மூலமே இறைவனின் புகழை உணர முடியும். இதுவே ஆன்மீகப் பயணத்தின் முதல் படி.
2. நான்கு விதமான பலன்கள் (Four-fold Fruits – Purusharthas): இந்தத் துதியைப் பாராயணம் செய்வதன் மூலம் ஒருவன் அறம் (Dharma), பொருள் (Artha), இன்பம் (Kama), மற்றும் வீடு (Moksha) ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைய முடியும் என்பதைத் தொடக்க வரிகள் உறுதிப்படுத்துகின்றன.
3. அறிவீனத்தை நீக்குதல் (Removal of Ignorance): தன்னை ஒரு அறிவற்றவனாக (Budhiheen) ஒப்புக்கொள்வது தாழ்வுமனப்பான்மை அல்ல; அது உண்மையான ஞானத்திற்கான தொடக்கம். வாயு புத்திரனான அனுமன், நம்மிடம் உள்ள அறியாமை, அகந்தை மற்றும் பயம் ஆகிய ‘கிலேசங்களை’ (Afflictions) நீக்கி, பலம், புத்தி மற்றும் வித்யையை வழங்குகிறார்.
4. தத்துவமும் செயல்பாடும் (Philosophy and Action): அனுமன் ‘ஞான குண ஸாகரன்’ (கடலளவு ஞானம் கொண்டவர்) என்று அழைக்கப்படுகிறார். ஒரு ஆன்மீகத் தேடல் என்பது வெறும் சிந்தனையோடு நின்றுவிடாமல், அனுமனைப் போலச் செயல் வீரமாகவும் இருக்க வேண்டும் என்பதை முன்னுரை வலியுறுத்துகிறது.
Introduction (Doha Section)
The introductory verses (Dohas) serve as a preparatory framework for the mind before diving into the main body of the hymn. They move the devotee through three distinct stages of internal alignment:
1. The Mirror of the Mind (Mental Purification)
The hymn begins with the metaphor of the mind as a mirror. Just as a dusty mirror cannot reflect light clearly, a mind clouded by ego and worldly desires cannot perceive the Divine.
- The Process: The devotee uses the “dust” of the Guru’s lotus feet—symbolizing humble wisdom—to cleanse the mirror.
- The Goal: Achieving a state of clarity where the pure glory of Lord Rama can be reflected.
2. The Four-Fold Purpose (Purusharthas)
The introduction establishes that the practice of this hymn is not just for emotional solace but for the fulfillment of the four primary goals of human life:
- Dharma: Righteousness and duty.
- Artha: Prosperity and resources.
- Kama: Fulfillment of legitimate desires.
- Moksha: Ultimate spiritual liberation.
3. Transcending Ignorance (The Prayer for Alignment)
The second Doha involves an act of radical honesty. The practitioner acknowledges their “Budhiheen” (intellectually limited) state. This is not self-deprecation but an admission that the limited human ego cannot navigate life’s complexities alone.
- The Invocation: By calling upon the Son of the Wind, the devotee asks for a triad of gifts: Bala (Strength), Budhi(Wisdom), and Vidya (Knowledge).
- The Result: The removal of the “Kleshas” (afflictions)—the mental and physical impurities that cause suffering and distorted perception.
| Concept | Philosophical Significance |
| Guru’s Dust (The Mirror) | The humble submission to a higher wisdom/framework. மனமாகிய கண்ணாடியைத் தூய்மைப்படுத்துதல். |
| Nija Manu Mukuru (The Goal) | Internal self-reflection and the cleansing of the psyche. நான்கு விதமான வாழ்வியல் இலக்குகளை (Purusharthas) அடைதல். |
| Pavana Kumara (The Prayer) | Engaging the “Life Force” (Prana) to drive transformation. வலிமை, நல்லறிவு மற்றும் ஞானத்தை வேண்டுதல். |
| Kalesha Vikara (Transformation) | Identifying and removing the root causes of mental agitation. அறியாமையிலிருந்து விடுபட்டு இறைப்பணியில் ஈடுபடுதல். |
குரு பாத தூசி கொண்டு
1
மனக்கண்ணாடி தூய்மை கொண்டேன்
நாற்செல்வம் அளிக்கும் ரகுவம்ச ராமனின்
மாசற்ற மகிமையை பாடி மகிழ்கின்றேன்
தோஹா (Doha) – தியானம்
ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ நிஜ மன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி
Shri Guru Charana Sarojo Raja, Nija Manu Mukuru Sudhari |
Barnau Raghuvara Bimala Jasu, Jo Dayaku Phala Chari ||
Meaning:
Having polished the mirror of my heart with the dust of my Guru’s lotus feet I sing the pure fame of the best of Raghus, which bestows the four fruits of life.
Detail: The “Phala Chari” refers to the four Purusharthas (human aims): Dharma (duty), Artha (prosperity), Kama(desire), and Moksha (liberation).
அறிவற்ற நான் அறிந்தேன்
2
வாயு புத்திரனை தியானிக்க
அவனே வலிமை அறிவு புத்தி அளித்து
அணைத்து இன்னல்களை விடுவிப்பான்
புத்திஹீன தனு ஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||
பொருள்:
நான் அறிவற்றவன் என்பதை அறிந்து, வாயு புத்திரனைத் தியானிக்கிறேன். எனக்கு வலிமை, அறிவு, ஞானம் தந்து என் துன்பங்களையும் குறைகளையும் நீக்கியருளும்.
Budhiheen Tanu Janike, Sumirau Pavana Kumara |
Bala Budhi Vidya Dehu Mohi, Harahu Kalesha Vikara ||
Meaning: Recognizing myself as ignorant, I remember the Son of the Wind (Hanuman). Please grant me strength, wisdom, and knowledge, and remove my sufferings and impurities.
Detail: This is a request for the removal of the five “Kleshas” (afflictions) in Yoga philosophy: ignorance, ego, attachment, aversion, and fear of death.
வெற்றி அனுமனுக்கே அவனே
1
ஞான ஒழுக்கத்தின் பெருங்கடல்
வெற்றி அத்தெய்விக மந்திக்கே
அவனே மூவுலகையும் ஒளிர்வித்தவன்
சௌபாயி (Chaupai) – பாடல்கள்
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர ||
வெற்றி ஹனுமானே, ஞானம் மற்றும் குணங்களின் கடலே! வானரங்களின் தலைவரே, மூன்று உலகங்களையும் ஒளிர்விப்பவரே, உமக்கு வெற்றி!
Jai Hanuman Gyana Guna Sagara |
Jai Kapisa Tihun Loka Ujagara ||
Victory to Hanuman, the ocean of wisdom and virtue. Victory to the Lord of the Monkeys, who illuminates the three worlds (physical, astral, and causal).
ராமா தூதனே
2
மகா வலிமை கொண்டவனே
அஞ்சனை மைந்தனே
வாயு குமாரனே
ராம தூத அதுலித பலதாமா |
அஞ்சனி புத்ர பவனஸுத நாமா ||
ஒப்பற்ற வலிமையின் இருப்பிடமான ராம தூதரே! அஞ்சனை மைந்தனே, வாயு புத்திரனே!
Rama Duta Atulita Bala Dhama |
Anjani Putra Pavana Suta Nama ||
Messenger of Rama, you are the abode of incomparable power. You are known as the son of Anjani and the Son of the Wind.
மகா தீர்னே
3
மின்னல் உடல் வீரனே
தீய எண்ணத்தை அழிப்பவனே
நல்ல எண்ணத்தை அளிப்பவனே
மஹாவீர விக்ரம பஜரங்கீ | குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ ||
வஜ்ரம் போன்ற உடலையும் வீரத்தையும் கொண்டவரே!
தீய எண்ணங்களை நீக்கி, நல்லறிவுக்குத் துணையாய் இருப்பவரே!
Mahavira Vikrama Bajarangi |
Kumati Nivara Sumati Ke Sangi ||
Great Hero, exceptionally valiant, with a body as strong as a thunderbolt (Vajra). You dispel wicked thoughts and are the companion of those with pure minds.
தங்க நிறத்தவன
4
ஒளிரும் தோற்றம் கொண்டவனே
அழகிய காதணியும்
சுருள் மூடியும் கொண்டவனே
கஞ்சன வரண விராஜ ஸுவேஶா |
கானன குண்டல குஞ்சித கேஶா ||
பொன்னிற மேனியும், அழகான உடையும் கொண்டவரே! காதுகளில் குண்டலங்களும், சுருண்ட கூந்தலும் உடையவரே!
Kanchana Varana Viraja Suvesha |
Kanana Kundala Kunchita Kesha ||
Your complexion is golden, and you are beautifully dressed. You wear magnificent earrings and have curly hair.
ஒரு கையில் கதாயுதம்
5
மறு கையில் கொடியும்
இட தோளில்
மௌஞ்சி நூல் அணிந்தவனே
ஹாத வஜ்ர ஔ த்வஜா விராஜை |
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை ||
கையில் வஜ்ராயுதமும் வெற்றிக் கொடியும் ஏந்தியவரே! தோளில் பூணூல் அணிந்து ஜொலிப்பவரே!
Hatha Vajra Au Dhvaja Virajai |
Kandhe Moonja Janeu Sajai ||
In your hands, you hold the thunderbolt and the flag of victory. Across your shoulder hangs the sacred thread made of Munja grass.
சிவ அவதாரமே
6
கேசரி நந்தனே
உனது மேன்மையை
இவுலகு போற்றி வணங்குமே
ஶங்கர ஸுவன கேஸரீ நந்தன |
தேஜ ப்ரதாப மஹா ஜக வந்தன ||
சிவனின் அம்சமே, கேசரியின் மைந்தனே! உமது ஒளியையும் வீரத்தையும் கண்டு இவ்வுலகமே உம்மை வணங்குகிறது.
Shankara Suvana Kesari Nandana |
Teja Pratapa Maha Jaga Vandana ||
The incarnation of Lord Shiva and the joy of King Kesari. Your aura and majesty are worshipped by the entire world.
கற்றவனே ஒழுக்கசீலனே
7
சிறந்த புத்திமானே
ராமனின் பணிக்காக
ஆவலுடன் காத்திருப்பவனே
வித்யாவான் குணீ அதி சாதுர |
ராம காஜ கரிபே கோ ஆதுர ||
கல்வியிற் சிறந்தவரே, குணவானே, புத்திசாலியே! ராமரின் பணிகளைச் செய்ய எப்போதும் ஆர்வமுடன் இருப்பவரே!
Vidyavana Guni Ati Chatura |
Rama Kaja Karibe Ko Atura ||
You are highly learned, virtuous, and exceptionally clever. You are always eager to perform the tasks of Lord Rama.
ராமகாவியத்தில் இன்புறுபவனே
8
சீதா ராம
இலட்சுமணை
இருதயத்தில் கொண்டவனே
ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா |
ராம லக்ஷமண ஸீதா மன பஸியா ||
இறைவனின் கதைகளைக் கேட்பதில் இன்பம் காண்பவரே! ராம, லட்சுமண, சீதையை இதயத்தில் கொண்டவரே!
Prabhu Charitra Sunibe Ko Rasiya |
Rama Lakhamana Sita Mana Basiya ||
You take immense delight in listening to the stories of the Lord. Rama, Lakshmana, and Sita dwell forever in your heart.
சிறு மந்தியாய் தோன்றி
9
சீதா அன்னையை வணங்கியவனே
சீரிய மந்தியாய் தோன்றி
இலங்கையை எரித்தவனே
ஸூக்ஷ்ம ரூப தரி ஸியஹி திகாவா |
விகட ரூப தரி லங்க ஜராவா ||
மிகச்சிறிய வடிவம் எடுத்து சீதைக்குத் தரிசனம் தந்தவரே! விஸ்வரூபம் எடுத்து இலங்கையை எரித்தவரே!
Sukshma Rupa Dhari Siyahi Dikhava |
Vikata Rupa Dhari Lanka Jarava ||
You assumed a tiny form to appear before Sita (in captivity) and a terrifying, massive form to burn down the city of Lanka.
பல ரூபதாரியாய்
10
அசுரரை அழித்தாய்
ராமச்சந்திர மூர்த்தியின்
ஆணையை விரும்பி முடித்தாய்
பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸவாரே ||
பிரம்மாண்ட வடிவம் எடுத்து அசுரர்களை அழித்தவரே! ராமச்சந்திர மூர்த்தியின் காரியங்களைச் செம்மையாக முடித்தவரே!
Bhima Rupa Dhari Asura Samhare |
Ramachandra Ke Kaja Savare ||
In your gigantic form, you destroyed the demons and successfully executed all the tasks assigned by Lord Rama.
சஞ்சீவினி மலை கொண்டு
11
இலட்சுமனை காத்தவனே
ரகு வம்ச திலக ராமனே
உன்னை தழுவி இன்புற்றானே
லாய ஸஜீவன லக்ஷமண ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே ||
சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனை உயிர் பிழைக்கச் செய்தவரே! அதனால் ராமபிரான் உம்மை மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.
Laya Sajivana Lakhamana Jiyaye |
Shri Raghuvira Harashi Ura Laye ||
You brought the Sanjivani herb and revived Lakshmana. Filled with joy, Rama embraced you to his chest.
ராமரால் போற்றி புகழப்பட்டவனே
12
ராமருக்கு பிரியமான
பரதனை போன்றவன்
என அறியப்பட்டவனே
ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ ||
ராமபிரான் உம்மைப் புகழ்ந்து, “நீ எனக்குப் பரதனைப் போன்ற அன்புத் தம்பி” என்று கூறினார்.
Raghupati Kinhi Bahuta Badayi |
Tuma Mama Priya Bharatahi Sama Bayi ||
The Lord of the Raghus (Rama) praised you greatly, saying, “You are as dear to me as my own brother Bharata.
ஆயிரம் தலை ஆதிசேஷனால்
13
போற்றி புகழப்பட்டவன் என
ராமர் கூறி தழுவி
இன்புற்றானே
ஸஹஸ வதன தும்ஹரோ யஶ காவை |
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லஜாவை ||
ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷனும் உமது புகழைப் பாடுவார் என்று கூறி ராமர் உம்மை அணைத்துக் கொண்டார்.
Sahasa Vadana Tumharo Jasha Gavai |
Asa Kahi Shripati Kantha Lagavai ||
“The thousand-headed serpent (Shesha Naga) sings your glory,” said Rama as he embraced you again.
சனகர் பிரம்மா
14
மற்ற முனிவர்களும்
நாரத சரஸ்வதி
நாக அகிசரூம்
ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |
நாரத ஶாரத ஸஹித அஹீஶா ||
ஸனகர் போன்ற முனிவர்களும், பிரம்மா, நாரதர், கலைவாணி மற்றும் ஆதிசேஷனும் உம்மைப் புகழ்கின்றனர்.
Sanakadika Brahmadi Munisha |
Narada Sharada Sahita Ahisha ||
Celestial sages like Sanagar, creator Brahma, and others, along with Narada, Goddess Saraswati, and the King of Serpents, sing your praises.
எமன் குபேரன் திசை தேவர்கள்
15
உன் புகழ் பாட முடியாதபோது
புலவர் மற்றும் அறிஞர்களை
என் சொல்வது
யம குபேர திகபால ஜஹாதே |
கவி கோவித கஹி ஸகே கஹாதே ||
இயமன், குபேரன், திசைக் காவலர்கள் மற்றும் புலவர்களாலும் உமது புகழை முழுமையாக விவரிக்க முடியாது.
Yama Kubera Digapala Jahante |
Kavi Kovida Kahi Sake Kahante ||
Yama (Death), Kubera (Wealth), and the guardians of the eight directions—even poets and scholars—cannot fully describe your greatness.
உனது சேவை அறிந்தவன் சுக்ரீவன்
16
உனது நட்பால்
ராமனின் உதவி பெற்றான்
ராஜ்ஜயம் ஆண்டான்
தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |
ராம மிலாய ராஜ பத தீன்ஹா ||
சுக்ரீவனுக்கு உதவி செய்து, ராமரை அவருக்கு அறிமுகம் செய்து, மீண்டும் அவருக்கு அரச பதவியைப் பெற்றுத் தந்தீர்.
Tuma Upakara Sugrivahi Kinha |
Rama Milaya Raja Pada Dinha ||
You did a great favor for Sugriva by introducing him to Rama, which eventually restored his kingdom and royal status..
உனது அறிவுரை
17
விபீஷணன் ஏற்றதனால்
இலங்கை அரசனான்
இது உலகம் அறிந்தது
தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா |
லங்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா ||
உமது ஆலோசனையை ஏற்று விபீஷணன் இலங்கையின் அரசன் ஆனான் என்பதை உலகம் அறியும்.
Tumharo Mantra Vibhishana Mana |
Lankeshvara Bhaye Saba Jaga Jana ||
Vibhishana followed your counsel, and the whole world knows he became the King of Lanka as a result.
ஆயிரம் யுகயோஜனய் தாண்டி
18
விண்னில் சென்றாய்
கதிரவனை கனியென
விழுங்கி தின்றாய்
யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ||
ஆயிரம் யோசனை தூரத்தில் இருந்த சூரியனை, ஒரு இனிப்பான பழம் என்று கருதிப் பிடிக்கச் சென்றவரே!
Yuga Sahasra Yojana Para Bhanu |
Lilyo Tahi Madhura Phala Janu ||
The sun is thousands of miles away, yet you swallowed it, thinking it was a sweet, red fruit.
ராமரின் மோதிரம்
19
உனது அருளாய் இருக்க
கடலும் கால் அளவானதே
இதில் என்ன ஆச்சிரியம்
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |
ஜலதி லாந்தி கயே அசரஜ நாஹீ ||
ராமபிரானின் மோதிரத்தை வாயில் ஏந்தி, கடலைத் தாண்டியதில் ஆச்சரியம் ஏதுமில்லை (ஏனெனில் நீர் அசாத்தியமானவர்).
Prabhu Mudrika Meli Mukha Mahi |
Jaladhi Langhi Gaye Acharaja Nahi ||
Holding the Lord’s ring in your mouth, you leaped across the vast ocean. This is no surprise given your divine power.
கடின செயல்களும்
20
இவ்வுலகில்
எளிதானதே
உனது அருளால்
துர்க்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே ||
உலகில் செய்ய முடியாத கடினமான காரியங்களும் உமது அருளால் எளிதாகிவிடும்.
Durgama Kaja Jagata Ke Jete |
Sugama Anugraha Tumhare Tete ||
Whatever difficult tasks exist in this world become easy by your grace.
ராமா ராஜ்ஜியமோ
21
அனுமன் காவலில்
அவன் அனுமதியன்றி
அணுவும் நுழையாதே
ராம துவாரே தும ரக்ஷவாரே |
ஹோத ந ஆக்ஞா பினு பைஸாரே ||
ராமரின் வாசலில் நீர் காவலராக இருக்கிறீர். உமது அனுமதி இன்றி எவரும் அவரை நெருங்க முடியாது.
Rama Duvare Tuma Rakhavare |
Hota Na Agya Binu Paisare ||
You are the gatekeeper of Rama’s court. No one can enter or attain His grace without your permission.
உனை சரணடைய
22
அனைத்து இன்பமும் கிடைக்கும்
உன் காவலில் நானிருக்க
பயம் ஏதும் எனக்கில்லை
ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |
தும ரக்ஷக காஹூ கோ டரனா ||
உம்மைச் சரணடைந்தால் எல்லா இன்பங்களும் கிடைக்கும். நீர் காக்கும்போது எதற்கு அஞ்ச வேண்டும்?
Saba Sukha Lahai Tumhari Sharana |
Tuma Rakshaka Kahu Ko Darana ||
All happiness is found in your shelter. When you are the protector, why should one have any fear?
உனது வலிமை
23
உனது அதிகாரம்
உனது கர்ஜனை கேட்டால்
மூஉலகமும் நடுநடுங்கும்
ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீனோ லோக ஹாங்க தே காம்பை ||
உமது வேகத்தையும் ஒளியையும் உம்மால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். உமது கர்ஜனையைக் கேட்டு மூவுலகும் நடுங்கும்.
Apana Teja Samharo Apai |
Tino Loka Hanka Te Kampai ||
Only you can control your own immense energy. All three worlds tremble at your roar.
அனுமன் நாமம் கூற
24
பூத பிசாசு
ஆவிகளும்
விலகி ஓடும்
பூத பிஶாச நிகட நஹி ஆவை |
மஹாவீர ஜப நாம ஸுனாவை ||
மஹாவீரன் எனும் உமது பெயரைச் சொன்னால் பூதப் பிசாசுகள் அண்டாது.
Bhuta Pishacha Nikata Nahi Avai |
Mahavira Jaba Nama Sunavai ||
Ghosts and evil spirits stay far away when the name of “Mahavira” is chanted.
அனுமன் நாமம் கூற
25
வியாதிகளும்
துன்பக்களும்
விலகி ஓடும்
நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹனுமத பீரா ||
வீர ஹனுமானை இடைவிடாது தியானித்தால் நோய்களும் துன்பங்களும் விலகும்.
Nasai Roga Harai Saba Pira |
Japata Nirantara Hanumata Bira ||
All diseases and pains vanish when the name of the brave Hanuman is continuously repeated.
எண்ணம் வார்த்தை செயலில்
26
அனுமனை நினைத்த வந்தால்
அனைத்து இன்னல்களும்
விலகி ஓடும்
ஸங்கட தே ஹனுமான சுடாவை |
மன க்ரம வசன தியான ஜோ லாவை ||
மனம், மொழி, மெய்யால் உம்மைத் தியானிப்பவர்களைத் துன்பங்களிலிருந்து நீர் விடுவிக்கிறீர்.
Sankata Te Hanumana Chudavai |
Mana Krama Vachana Dhyana Jo Lavai ||
Hanuman delivers one from all troubles if they meditate on him in thought, word, and deed.
யோகிகளும் போற்றி வணங்கும்
27
ஸ்ரீராமனின் தேவைகளை
சுலபமாய் நீ
நிறைவேற்றினாய்
ஸப பர ராம தபஸ்வீ ராஜா |
தினகே காஜ ஸகல தும ஸாஜா ||
தவக்கோலம் பூண்ட ராமரே அனைவருக்கும் அரசன். அவருடைய அனைத்துப் பணிகளையும் நீர் செவ்வனே செய்தீர்.
Saba Para Rama Tapasvi Raja |
Tinake Kaja Sakala Tuma Saja ||
Rama is the Supreme King of ascetics, and you managed all of His affairs perfectly.
விரும்பியதை வேண்டி
28
அனுமனை அணுக அவனோ
உரியதை தந்து அதை ஏற்க
முடிவிலா முழுமை தருகிறார்
ஔர மனோரத ஜோ கோயி லாவை | ஸோயி அமித ஜீவன பல பாவை ||
வேறு என்ன விருப்பம் கொண்டு உம்மிடம் வந்தாலும், அவர்கள் அளவற்ற நற்பலன்களைப் பெறுவார்கள்.
Aura Manoratha Jo Koyi Lavai |
Soyi Amita Jivana Phala Pavai ||
Whoever approaches you with any desire attains the immortal fruit of life.
நான்கு யுகங்களும் போற்றும்
29
உன் புகழ்
உன் வலிமை
இப்பிரபஞ்சம் போற்ற பரவுமே
சாரோ யுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||
நான்கு யுகங்களிலும் உமது புகழ் நிலைத்திருக்கும். உலகையே பிரகாசிக்கச் செய்யும் ஒளி நீர்.
Charo Yuga Paratapa Tumhara |
Hai Parasidha Jagata Ujiyara ||
Your glory spans all four Yugas (Ages). Your fame is world-renowned and illuminates the universe.
ரிஷி முனிவரை
30
காத்து நிற்பது நீ
அசுரரை அழித்தது நீ
ராமரின் நேசமானாய் நீ
ஸாது ஸந்த கே தும ரக்ஷவாரே |
அஸுர நிகந்தன ராம துலாரே ||
நல்லவர்களையும் முனிவர்களையும் காப்பவரே! அசுரர்களை அழிப்பவரே, ராமருக்குப் பிரியமானவரே!
Sadhu Santa Ke Tuma Rakhavare |
Asura Nikandana Rama Dulare ||
You are the protector of sages and saints, the destroyer of demons, and the darling of Lord Rama.
எட்டு சித்திகளும்
31
ஒன்பது செல்வங்களும்
வேண்டுவோருக்கு வழங்க
சீதையின் அருள் பெற்றவன் நீ
அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ வர தீன் ஜானகீ மாதா ||
எட்டு வகை சித்திகளையும் ஒன்பது வகை நிதிகளையும் மற்றவர்களுக்கு வழங்கும் ஆற்றலை அன்னை சீதை உமக்கு வழங்கியுள்ளார்.
Ashta Siddhi Nau Nidhi Ke Data |
Asa Vara Dina Janaki Mata ||
Mother Sita granted you the power to bestow the Eight Siddhis (supernatural powers) and the Nine Nidhis(treasures).
ராமரை அறிந்த நீ
32
ராமபக்த அனுமன் நீ
எப்பொழுதும்
ரகு வம்ச சேவகன் நீ
ராம ரஸாயன தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||
ராம பக்தியெனும் அருமருந்து உம்மிடம் உள்ளது. எப்போதும் ராமரின் தொண்டராகவே இருக்கிறீர்.
Rama Rasayana Tumhare Pasa |
Sada Raho Raghupati Ke Dasa ||
You possess the chemical/elixir of Rama’s name (Rama Rasayana). May you always remain a humble servant of the Lord.
உனது பெருமை பாட
33
ராமர் அடி சேர
முப்பிறவி பிணிகளும்
விலகி ஓடும்
தும்ஹரே பஜன ராம கோ பாவை |
ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை ||
உம்மைப் பாடினால் ராமரின் அருளைப் பெறலாம். பிறவித் துன்பங்கள் நீங்கும்.
Tumhare Bhajana Rama Ko Pavai |
Janma Janma Ke Dukha Bisaravai ||
By singing your praise, one finds Rama and is freed from the sorrows of many lifetimes.
இறந்தபின் ராமனிடம்
34
சேர்த்தவன் அவனே
பலபிறவிகளிலும் நிரந்தர
சேவகனே
அந்த கால ரகுவர புர ஜாயீ |
ஜஹாம் ஜன்ம ஹரி பக்த கஹாயீ ||
வாழ்வின் இறுதியில் ராமரின் இருப்பிடத்தை அடைவர். மீண்டும் பிறந்தாலும் ஹரி பக்தராகவே பிறப்பர்.
Anta Kala Raghuvara Pura Jayi |
Jaham Janma Hari Bhakta Kahayi ||
At the time of death, such a devotee goes to Rama’s abode and is known as a devotee of the Lord in every future birth.
நினைக்க வேண்டாம்
35
வேறு தெய்வமே
அனுமனை வேண்டி பெறலாம்
அனைத்து பேரின்பமே
ஔர தேவதா சித்த ந தரயீ |
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ ||
மற்ற தேவதைகளைத் தொழாவிட்டாலும், ஹனுமானை வணங்குவதால் மட்டுமே எல்லா இன்பங்களையும் பெறலாம்.
Aura Devata Chitta Na Dharayi |
Hanumata Seyi Sarva Sukha Karayi ||
One need not focus on any other deity; serving Hanuman alone grants all happiness.
36
துன்பங்கள் பறந்துபோகும்
வலிகளும் மறந்துபோகும்
மகாவலிமை கொண்ட
அனுமனை நினைக்க
ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹனுமத பலபீரா ||
வலிமை மிக்க ஹனுமானைத் தியானித்தால் சங்கடங்கள் நீங்கி, வேதனைகள் மறையும்.
Sankata Katai Mitai Saba Pira |
Jo Sumirai Hanumata Balabira ||
All difficulties and pains cease for those who remember the powerful and brave Hanuman.
போற்றி போற்றி
37
அனுமன் போற்றி
குருவாய் நின்று
அருள்வாய் போற்றி
ஜய ஜய ஜய ஹனுமான கோஸாயீ |
க்ருபா கரஹு குரு தேவ் கீ நாயீ ||
வெற்றி, வெற்றி, வெற்றி ஹனுமானே! ஒரு குருவைப் போல எங்களுக்கு அருள் புரியுங்கள்.
Jai Jai Jai Hanumana Gosayi |
Kripa Karahu Guru Deva Ki Nayi ||
Hail, Hail, Hail, Lord Hanuman! Please bestow your grace upon me as my Supreme Guru.
எவன் ஒருவன் நூறு முறை
38
அனுமன் நாற்பதை கூற
அவன் முக்தியற்று
முழு மகிழ்ச்சியும் அடைவான்
ஜோ ஶத வார பாட கர ஜோயீ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோயீ ||
இதை நூறு முறை பாராயணம் செய்பவர்கள் பந்தங்களிலிருந்து விடுபட்டுப் பேரின்பம் எய்துவர்.
Jo Shata Vara Patha Kara Joyi |
Chutahi Bandi Maha Sukha Hoyi ||
One who recites this one hundred times is released from bondage and attains great bliss.
எவன் ஓருவன் அனுதினம்
39
அனுமன் நாற்பது பாட
அவர்கள் சகலசித்திகளும் அடைய
அக்கெளரிக் கணவன் சாட்சி
ஜோ யஹ படே ஹனுமான சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா ||
இதை ஓதுபவர்கள் சிவபெருமானின் சாட்சியுடன் அனைத்து சித்திகளையும் அடைவார்கள்.
Jo Yaha Padhe Hanumana Chalisa |
Hoya Siddhi Sakhi Gaurisha ||
Whoever reads these forty verses will attain success (Siddhi), with Lord Shiva (Gaurisha) as the witness.
அனுதினம் ரகு பாடி
40
இறைவனை வேண்டியது
இறைவன் என்றுன்றும்
இருதயத்தில் எழுந்தருள வேண்டும்
துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா ||
துளசிதாசன் எப்போதும் இறைவனின் தொண்டன். இறைவா, என் இதயத்தில் குடியேறுங்கள்.
Tulasidasa Sada Hari Chera |
Kijai Natha Hridaye Maha Dera ||
Tulsidas is ever the servant of the Lord. O Lord, please make your home in my heart.
துன்பம் போக்கும் வாயு புத்திரனே
43
மங்கள மூர்த்தி ரூபனே
சீதா ராமா லக்ஷ்மருடன்
இருதயத்தில் எழுந்தருள வேண்டும்
அந்திம தோஹா (Final Doha)
பவன தனய ஸங்கட ஹரண மங்கள மூரதி ரூப |
ராம லக்ஷமண ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||
பொருள்: துன்பம் போக்கும் வாயு புத்திரனே, மங்கல வடிவினனே! தேவர்களின் அரசனே! ராமன், லட்சுமணன், சீதையுடன் என் இதயத்தில் நீங்காது வீற்றிருப்பாயாக.
Pavan Tanay Sankat Haran, Mangal Murti Roop |
Ram Lakhan Sita Sahit, Hriday Basahu Sur Bhoop ||
Meaning: O Son of the Wind, Banisher of sorrow, and the Embodiment of auspiciousness! O King of Devas, please dwell in my heart along with Rama, Lakshmana, and Sita.
By using Hanuman as the archetype, we can map this progression from the Agitated Monkey to the Focused Driver and finally to Pure Awareness.
Stage 1: The Agitated State (The Reactive Monkey)
In this state, the mind is governed by Vikshepa (distraction). It is the “Monkey” without a master, jumping between past regrets and future anxieties. It possesses immense power but lacks a lens to focus it.
- Mechanical Analogy: A high-torque engine running in neutral. Lots of noise and heat, but zero displacement.
- The Chalisa Connection: This is the “Budhiheen” (intellectually fragmented) state mentioned in the opening. The mind is full of Kalesha (afflictions).
Stage 2: The Focused Driver (The Directed Will)
Through the “training” you mentioned, the Monkey is given a mission. It becomes the Driver. This is the state of Ekagra(one-pointedness). The Driver doesn’t suppress the monkey’s energy; he channels it.
- Mechanical Analogy: The engine is now engaged in gear. The power is translated into precise motion toward a destination.
- The Chalisa Connection: This is Hanuman as “Rama Kaja Karibe Ko Atura”—eager and ready for the task. It is the transition to being a “Vidyavana Guni Ati Chatura” (Learned, Virtuous, and Clever).
- The “Sapta” of the Driver:
- Intention: Clarity of the task.
- Discipline: The sacred thread (Janeu) of boundaries.
- Energy: The “Vajra” (thunderbolt) of willpower.
- Agility: The ability to change size (Sukshma/Vikata rupa) based on the problem.
- Persistence: Crossing the ocean despite obstacles.
- Service: Ego-less execution.
- Result: Successful delivery of the “Ring” (the solution).
Stage 3: Pure Awareness (The Silent Seeker)
Once the task is completed and the destination is reached, the Driver’s role ends. The “doing” stops, and “being” begins. This is the state of Nirodha (stillness) or Pure Awareness. The Driver realizes he is not the separate “doer” but a manifestation of the whole.
- Mechanical Analogy: The vehicle has reached the summit. The engine is turned off. There is only the vast, silent view from the top.
- The Chalisa Connection: This is the final state of “Ashta Siddhi Nau Nidhi Ke Data” (The Bestower of Powers). Hanuman no longer seeks anything; he is the source. He sits at the feet of Rama (The Self) in eternal presence.
The MinDual Mapping
| Feature | Agitated State | Focused Driver | Pure Awareness |
|---|---|---|---|
| Persona | The Distracted Monkey | The Professional Leader | The Silent Seeker |
| Action | Erratic / Reactive | Strategic / Intentional | Spontaneous / Non-doing |
| Logic | Maya (Illusion) | MVC (Structure) | Advaita (Oneness) |
| Outcome | Fatigue & Confusion | Achievement & Success | Peace & “Moksha” |
Export to Sheets
The “Anya” (The Other) perspective
Here, “முழு மகிழ்ச்சியும் அடைவான்” (He will attain total happiness/completion). This completion occurs when the Driver successfully delivers the Seeker to the doorstep of Awareness.
Through this Bhakti geetham You are essentially teaching your “Driver” how to park the car so the “Seeker” can finally step out and enjoy the silence.
Does this mapping align with how you are currently structuring your operating system?


Leave a comment