முகவரி கண்டுபிடிப்பதே
கடினமாயிருந்த காலத்தில்தான்
முப்பொழுதும்
யாராவது வந்து கொண்டே இருந்தனர்
வீட்டுக்கு.
காலங்கள் மாறின.
எந்நேரமும்
செய்திகளாய் வந்தவண்ணமே இருந்தனர்
அகத்தின் அகதிகளாய்…
அலைபேசியின் தகவையாய்,
இன்ஸ்டா விருந்தாளியாய்,
தொலைவான தொல்லையாய்,
கட்டணமில்லா பயணிகளாய்.
அதிர்வாய்
ஆராய்ந்தனர்.
விருந்தோம்பல் –
கண்டங்கள் கடந்த
அனுபவங்களின் பகிர்வாய்
செவிக்கு உணவாய்,
மனத்திற்கு மருந்தாய்,
எந்நேரமும் உறவாய்.
தள்ளா அகவையில்
யாரும் இல்லா அகத்தில்
கையில மட்டும்
அலைபேசி
இதயத்தின் peace maker.


Leave a comment