யோசி நண்பா நேரம் உனதாக
ஓவியம் தீட்டு கடிதம் எழுது
உழைத்து உண் மரம் நடு
எண்ணிப்பார் உன் ஆசை தேவைகளை
யோசி நண்பா நாட்கள் உனதாக
ஓடும் நதிகளில் நீராடு மலைகளில் நட
இசைக்கு செவி கொடு புத்தகம் படி
இந்நாள் போல் வாழ்நாள் இருந்திடாதே
யோசி நண்பா உலகம் உன்னதமாக
பகலவன் ஒளிகூட்ட காற்று தலைகோத
மண் மனம்கவர மழை நீராட்ட
நன்மக்களுடண் உறவாடு வாழ்கையை வாழ்ந்திடு
யோசி நண்பா எண்ணத்தில நிருத்தியோசி
வயோதிகமும் வந்திடும் அது கடிணமாய் இருந்திடும்
உன் காலம் முடிய நீ போகத்தான் வேண்டும்
வாழும் நாட்களை மகிழ்ச்சியாக்க யோசி நண்பா