குரு பாத தூசி கொண்டு மனக்கண்ணாடி தூய்மை கொண்டேன் நாற்செல்வம் அளிக்கும் ரகுவம்ச ராமனின் மாசற்ற மகிமையை பாடி மகிழ்கின்றேன் அறிவற்ற நான் அறிந்தேன் வாயு புத்திரனை தியானிக்க அவனே வலிமை அறிவு புத்தி அளித்து அணைத்து இன்னல்களை விடுவிப்பான் வெற்றி அனுமனுக்கே அவனே ஞான ஒழுக்கத்தின் பெருங்கடல் வெற்றி அத்தெய்விக மந்திக்கே அவனே மூவுலகையும் ஒளிர்வித்தவன் ராமா தூதனே மகா வலிமை கொண்டவனே அஞ்சனை மைந்தனே வாயு குமாரனே மகா தீர்னே மின்னல் உடல் வீரனே தீய எண்ணத்தை அழிப்பவனே நல்ல எண்ணத்தை அளிப்பவனே தங்க நிறத்தவனே ஒளிரும் தோற்றம் கொண்டவனே அழகிய காதணியும் சுருள் மூடியும் கொண்டவனே ஒரு கையில் கதாயுதம் மறு கையில் கொடியும் இட தோளில் மௌஞ்சி நூல் அணிந்தவனே சிவ அவதாரமே கேசரி நந்தனே உனது மேன்மையை இவுலகு போற்றி வணங்குமே கற்றவனே ஒழுக்கசீலனே சிறந்த புத்திமானே ராமனின் பணிக்காக ஆவலுடன் காத்திருப்பவனே ராமகாவியத்தில் இன்புறுபவனே சீதா ராம இலட்சுமணை இருதயத்தில் கொண்டவனே சிறு மந்தியாய் தோன்றி சீதா அன்னையை வணங்கியவனே சீரிய மந்தியாய் தோன்றி இலங்கையை எரித்தவனே பல ரூபதாரியாய் அசுரரை அழித்தாய் ராமச்சந்திர மூர்த்தியின் ஆணையை விரும்பி முடித்தாய் சஞ்சீவினி மலை கொண்டு இலட்சுமனை காத்தவனே ரகு வம்ச திலக ராமனே உன்னை தழுவி இன்புற்றானே ராமரால் போற்றி புகழப்பட்டவனே ராமருக்கு பிரியமான பரதனை போன்றவன் என அறியப்பட்டவனே ஆயிரம் தலை ஆதிசேஷனால் போற்றி புகழப்பட்டவன் என ராமர் கூறி தழுவி இன்புற்றானே சனகர் பிரம்மா மற்ற முனிவர்களும் நாரத சரஸ்வதி நாக அகிசரூம் எமன் குபேரன் திசை தேவர்கள் உன் புகழ் பாட முடியாதபோது புலவர் மற்றும் அறிஞர்களை என் சொல்வது உனது சேவை அறிந்தவன் சுக்ரீவன் உனது நட்பால் ராமனின் உதவி பெற்றான் ராஜ்ஜயம் ஆண்டான் உனது அறிவுரை விபீஷணன் ஏற்றதனால் இலங்கை அரசனான் இது உலகம் அறிந்தது ஆயிரம் யோஜனய் தாண்டி விண்னில் சென்றாய் கதிரவனை கனியென விழுங்கி தின்றாய் ராமரின் மோதிரம் உன் வாயில் இருக்க கடலும் கால் அளவானதே இதில் என்ன ஆச்சிரியம் கடின செயல்களும் இவ்வுலகில் எளிதானதே உனது அருளால் ராமா ராஜ்ஜியமோ அனுமன் காவலில் அவன் அனுமதியன்றி அணுவும் நுழையாதே உனை சரணடைய அனைத்து இன்பமும் கிடைக்கும் உன் காவலில் நானிருக்க பயம் ஏதும் எனக்கில்லை உனது வலிமை உனது அதிகாரம் உனது கர்ஜனை கேட்டால் மூஉலகமும் நடுநடுங்கும் அனுமன் நாமம் கூற பூத பிசாசு ஆவிகளும் விலகி ஓடும் அனுமன் நாமம் கூற வியாதிகளும் துன்பக்களும் விலகி ஓடும் எண்ணம் வார்த்தை செயலில் அனுமனை நினைத்த வந்தால் அனைத்து இன்னல்களும் விலகி ஓடும் யோகிகளும் போற்றி வணங்கும் ஸ்ரீராமனின் தேவைகளை சுலபமாய் நீ நிறைவேற்றினாய் விரும்பியதை வேண்டி அனுமனை அணுக அவனோ உரியதை தந்து அதை ஏற்க முடிவிலா முழுமை தருகிறார் நான்கு யுகங்களும் போற்றும் உன் புகழ் உன் வலிமை இப்பிரபஞ்சம் போற்ற பரவுமே ரிஷி முனிவரை காத்து நிற்பது நீ அசுரரை அழித்தது நீ ராமரின் நேசமானாய் நீ எட்டு சித்திகளும் ஒன்பது செல்வங்களும் வேண்டுவோருக்கு வழங்க சீதையின் அருள் பெற்றவன் நீ ராமரை அறிந்த நீ ராமபக்த அனுமன் நீ எப்பொழுதும் ரகு வம்ச சேவகன் நீ உனது பெருமை பாட ராமர் அடி சேர முப்பிறவி பிணிகளும் விலகி ஓடும் இறந்தபின் ராமனிடம் சேர்த்தவன் அவனே பலபிறவிகளிலும் நிரந்தர சேவகனே நினைக்க வேண்டாம் வேறு தெய்வமே அனுமனை வேண்டி பெறலாம் அனைத்து பேரின்பமே துன்பங்கள் பறந்துபோகும் வலிகளும் மறந்துபோகும் மகாவலிமை கொண்ட அனுமனை நினைக்க போற்றி போற்றி அனுமன் போற்றி குருவாய் நின்று அருள்வாய் போற்றி எவன் ஒருவன் நூறு முறை அனுமன் நாற்பதை கூற அவன் முக்தியற்று முழு மகிழ்ச்சியும் அடைவான் எவன் ஒருவன் பக்தியுடன் அனுமன் நாற்பது கூற அவன் வேண்டியது பெற அந்த கௌரி கணவன் சாட்சி ரகு பாடி இறைவனை வேண்டியது இறைவன் என்றுன்றும் இருதயத்தில் எழுந்தருள வேண்டும் வாயு புத்திரனே மங்கள மூர்த்தி ரூபனே சீதா ராமா லக்ஷ்மருடன் இருதயத்தில் எழுந்தருள வேண்டும்